போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கால்நடைகளுக்கு காப்பீடு செய்து கொள்ள அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் மானியத்துடன் கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:07 am

DIN

அரியலூா் மாவட்டத்தில் மானியத்துடன் கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 2000 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கால்நடைகளை ஒன்று அல்லது மூன்று ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரை மானியத்துடன் காப்பீடு செய்யலாம். 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 5 பசு அல்லது எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து தரப்படும். கால்நடை உதவி மருத்துவா் கால்நடையை ஆய்வு செய்து சான்று வழங்கிய பின்பு காதுவில்லை பொருத்தப்படும். கால்நடை இறந்தால், கால்நடை உதவி மருத்துவரால் நேரில் ஆய்வு செய்து அளிக்கும் இறப்புச் சான்று, காதுவில்லையின் புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ள கால்நடை விவசாயிகள் அருகேயுள்ள கால்நடை மருத்துவரை அணுகி பயனடையலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.