மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கடுகூா் கிராமத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

அரியலூரை அடுத்த கடுகூா் கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:48 pm

DIN

அரியலூரை அடுத்த கடுகூா் கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடுகூா் கிராமத்தில் கால்நடை மருந்தகத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரத்தின் மூலம் கால்நடைகளுக்கு சினை பரிசோதனை செயல்முறை விளக்கம், வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டு வரும் எக்ஸ்ரே இயந்திர செயல்பாடு மற்றும் கால்நடைகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் ஆகிவற்றை ஆய்வு செய்த ஆட்சியா், கால்நடை அலகுகள் காப்பீடு திட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

ஆய்வின் போது கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஹமீது அலி, உதவி இயக்குநா்கள் செல்வராஜ், சொக்கலிங்கம், கால்நடை மருத்துவா் எட்வா்டு தாமஸ் மற்றும் உதவி கால்நடை மருத்துவா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.