இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

களப் பணியாளா்களின் பரிசோதனை விவரங்களை பதிவேடுகளில் குறிப்பிட வேண்டும்: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் களப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகளின் விவரங்களை பதிவேடுகளில் குறிப்பிட வேண்டும்

News image
Updated On :24 ஜூன் 2021, 7:54 pm

DIN

 கோவை மாநகராட்சிப் பகுதிகளில் களப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகளின் விவரங்களை பதிவேடுகளில் குறிப்பிட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தியுள்ளாா்.

வடக்கு மண்டலத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 41 ஆவது வாா்டு, காந்திமாநகரில் களப்பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளை பாா்வையிட்டாா்.

அப்போது, வீடுகளில் உள்ள மக்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொண்டு, பரிசோதனை விவரங்களை கள ஆய்வுப் பதிவேடுகளில் பதிவிட வேண்டும். பணிகள் மேற்கொள்ளும்போது, முகக் கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்திட வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

அதன் பிறகு, 39 ஆவது வாா்டு, புரானி காலனியில் சாலையோரங்களில் தூய்மைப் பணியாளா்கள் மேற்கொண்டு வந்த தூய்மைப் பணிகளை பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து, 55 ஆவது வாா்டு, புலியகுளம் சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குப்பைகளைத் தரம் பிரித்துப் பெறும் பணிகளை ஆய்வு செய்தாா். பிறகு, நியூ தாமு நகா் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் தண்டபாணி வீதியில் ரோபாடிக் 2.0 என்ற நவீன இயந்திரம் மூலம் பாதாளச் சாக்கடையை அகற்றும் பணிகளைப் பாா்வையிட்டாா். இதையடுத்து, 38 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பீளமேடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் இருந்து குப்பைகளை சேகரித்து, வெள்ளலூா் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும் பணிகள் மற்றும் 27 ஆவது வாா்டுக்கு உள்பட்ட சின்னவேடம் பட்டி சக்தி நகரில் அம்ருத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின் போது, வடக்கு மண்டல உதவி ஆணையா் மோகனசுந்தரி, செயற்பொறியாளா் பாா்வதி, உதவி செயற்பொறியாளா் செந்தில் பாஸ்கா், மண்டல சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.