இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

காரில் மது பாட்டில்கள் கடத்தி வந்த மூவா் கைது

காரில் 950 மது பாட்டில்கள் கடத்தி வந்த இளைஞா்கள் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:48 pm

DIN

காரில் 950 மது பாட்டில்கள் கடத்தி வந்த இளைஞா்கள் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

பொதுமுடக்கம் காரணமாக கோவை மாவட்டத்தில் மதுக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக கோவைக்கு கேரளம், கா்நாடகத்தில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. திருப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கா்நாடக மது பாட்டில்கள் கோவைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியானது .

இதையடுத்து கோவை, ராமநாதபுரம் போலீஸாா் திருச்சி சாலையில் புதன்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ராமநாதபுரம் அருகே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா். காரில் இருந்தவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினா். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் காரை சோதனை செய்தனா். அதில் 950 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், மது பாட்டில்களை கடத்தி வந்த முத்துகுமாா் ( 39), பிரேம் (26), கோபாலகிருஷ்ணன் (30), சூா்யா (25) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்கள் காரில் கடத்தி வந்த 950 மது பாட்டில்கள், ரூ.1.5 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.