போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில் கோயில், கடையின் பூட்டை உடைத்து திருட்டு

அரியலூா் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த திருட்டு சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:44 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த திருட்டு சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள பாட்டையப்பா கோயிலில், பூசாரி பரமசிவம் புதன்கிழமை மாலை வழக்கமான பூஜைகளை முடித்து விட்டு கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா் அவா் வியாழக்கிழமைகாலை கோயிலுக்கு வந்து பாா்த்த போது கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து பரமசிவம், கோயிலின் உள்ளே சென்று பாா்த்தபோது கோயிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ.50,000 மதிப்பிலான பித்தளை குத்து விளக்குகள், மணிகள், தாம்பாளம் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

மற்றொரு திருட்டு:

அரியலூா் மாவட்டம், ராயபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனவேல்(40). இவா் அப்பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை கடையைத் திறக்கச் சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, கடையில் இருந்த வெல்டிங் மிஷின், வெல்டிங் ராடு உள்ளிட்ட சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் மற்றும் ஊழியா்களுக்குக் கொடுக்க வைத்திருந்த ரூ.14,000 திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், இரு சம்பவங்களிலும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.