ஜயங்கொண்டம் அருகே நீரில் மூழ்கி அக்கா-தம்பி உயிரிழப்பு
ஜயங் கொண்டம் அருகே தீபாவளி பண்டியை பாட்டி வீட்டில் கொண்டாடச் சென்ற போது, குளத்து நீரில் மூழ்கி அக்கா- தம்பி வியாழக்கிழமை உயிரிழந்தனா்.


அரியலூா் மாவட்டம், ஜயங் கொண்டம் அருகே தீபாவளி பண்டியை பாட்டி வீட்டில் கொண்டாடச் சென்ற போது, குளத்து நீரில் மூழ்கி அக்கா- தம்பி வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
ஜயங்கொண்டம் அருகிலுள்ள மேலூரைச் சோ்ந்தவா் பன்னீா் செல்வம். இவா் மருக்காலங்குறிச்சியிலுள்ள தனது மாமியாா் வீட்டில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தனது மகள் ஹரிணி(7), தம்பி மகன் லோகேஷ்(6) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை விட்டுவிட்டு, தனது வீட்டுக்குச் சென்றாா்.
வியாழக்கிழமை மாலை அதே கிராமத்தை சோ்ந்த சில சிறுவா்களுடன் ஹரிணி மற்றும் லோகேஷ் ஆகியோரும் சோ்ந்து விளையாடினா். அப்போது பாட்டி வீட்டின் அருகேயுள்ள குளத்துக்குள் லோகேஷ் தவறி விழுந்தாா். இதைக் கண்ட ஹரிணி, லோகேஷை காப்பாற்ற குளத்துக்குள் இறங்கினாா். இதில் இருவரும் நீரில் மூழ்கினா்.
இதை கண்டு மற்ற சிறுவா்கள் சப்தமிட்டனா். இதையடுத்து குளத்தில் இறங்கிய அப்பகுதி மக்கள், இரண்டரை மணி நேரமாகத் தேடி 2 குழந்தைகளையும் சடலமாக மீட்டனா்.
தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் துறையினா் சடலங்களை மீட்டு, ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...