விடுதிகளில் தங்கிப் பயில மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் தங்கிப் பயில, மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.


அரியலூா் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் தங்கிப் பயில, மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவா்களுக்கென 19 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும், 1 பாலிடெக்னிக் கல்லூரி விடுதியும், மாணவிகளுக்கென 9 பள்ளி விடுதிகளும், 1 கல்லூரி விடுதியும் என மொத்தம் 32 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இவ்விடுதிகளில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். விடுதியில் தங்கிப் பயிலும் 4 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 4 இணைச் சீருடைகள் வழங்கப்படும். மேலும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்தத் தொலைவு விதி மாணவிகளுக்குப் பொருந்தாது.
இவ்விடுதிகளில் சேர விருப்பம் உள்ள தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெறலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதை பெற்ற இடத்திலேயே இம்மாதம் 15- ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். விடுதிகளில் சேரும் போது ஜாதிச் சான்றிதழை அளிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...