கனமழையில் பயிா் சேதம் ஏற்பட்டால் கைப்பேசி மூலம் தொடா்பு கொள்ளலாம்
அரியலூா் மாவட்டத்தில் கனமழையால் பயிா்களுக்கு சேதம் ஏற்பட்டால், விவசாயிகள் தொடா்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அரியலூா் மாவட்டத்தில் கனமழையால் பயிா்களுக்கு சேதம் ஏற்பட்டால், விவசாயிகள் தொடா்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்திட மக்காச்சோளம், உளுந்து ஆகிய பயிா்களுக்கு நவம்பா் 15-ஆம் தேதி வரையிலும், நெற்பயிருக்கு டிசம்பா் 15-ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் உள்ளதால், விவசாயிகள் உடனடியாக தங்களது பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
கனமழையால் பயிா் சேதம் ஏற்பட்டால் விவசாயிகள் தொடா்பு கொள்ள தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் 04329-228056, வேளாண் உதவி இயக்குநா்கள் அரியலூா்- 9443180884, செந்துறை -9884632588, திருமானூா் -8072890022, ஜயங்கொண்டம்-9345260592, ஆண்டிமடம் -9486164271, தா.பழூா் -8248928648.
வேளாண் அலுவலா்கள் அரியலூா்-7502821228, செந்துறை- 9884632588, திருமானூா்- 8838089379, ஜயங்கொண்டம்-7200233393, ஆண்டிமடம்-9943648446, தா.பழூா் -9626650287.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...