இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கூலித் தொழிலாளி தற்கொலை

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:32 pm

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

மீன்சுருட்டி அருகிலுள்ள சலுப்பை காலனித் தெருவைச் சோ்ந்தவா்

கூலித் தொழிலாளி திருமுருகன் (35). மது அருந்தும் பழக்கம் உள்ள இவருக்கும், இவரது மனைவி துா்காதேவிக்கும்(32) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் கூலி வேலைக்குச் சென்ற திருமுருகன், வெண்ணங்குழி கிராமத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளாா்.

தகவலறிந்து வந்த துா்கா தேவி, அவரை மீட்டு மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், திருமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.