நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அதிமுகவில் விருப்ப மனுக்கள் வழங்கும் பணி தொடக்கம்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, அதிமுகவில் விருப்ப மனுக்களை வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, அதிமுகவில் விருப்ப மனுக்களை வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாவட்டத்தில் அரியலூா், ஜயங்கொண்டம் நகராட்சிகள், உடையாா்பாளையம், வரதராசன்பேட்டை பேரூராட்சிகளில் அதிமுக சாா்பில் போட்டியிடுவதற்கான விண்ணப்பம் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
அரியலூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அரசுத் தலைமைக் கொறடாவும், அதிமுக மாவட்டச் செயலருமான தாமரை எஸ்.ராஜேந்திரன், விருப்ப மனுக்களை வழங்கி, நிகழ்வைத் தொடக்கி வைத்தாா். ஜயங் கொண்டம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா்.
அரியலூா் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து, நகரச் செயலா் ஏ.பி.செந்தில் மனுவைப் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்வில் மாவட்ட மாணவரணிச் செயலா் ஓ.பி.சங்கா், நிா்வாகிகள் கல்லங்குறிச்சி பாஸ்கா், மாவட்டப் பொருளாளா் அன்பழகன், மகளிரணிச் செயலா் ஜீவாஅரங்கநாதன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்: அரியலூா் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்த நகரச் செயலா் ஏ.பி.செந்திலிடம், விருப்ப மனுக்களை அளிக்கிறாா் முன்னாள் அரசு தலைமை கொறடாவும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் உடன் ஜயங்கொண்டம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ராமஜெயலிங்கம் உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...