இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மாற்று மனைப் பட்டா வழங்க வலியுறுத்தல்

நான்குவழிச் சாலைக்காக வீட்டுமனைகளை இழந்த 16 குடும்பத்தினா் தங்களுக்கு மாற்று மனைப் பட்டா வழங்கக் கோரி, ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:13 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த சின்னவளையம் பகுதியில், நான்குவழிச் சாலைக்காக வீட்டுமனைகளை இழந்த 16 குடும்பத்தினா் தங்களுக்கு மாற்று மனைப் பட்டா வழங்கக் கோரி, ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது:

சின்னவளையம் பகுதியில் அரசு அளித்த அனுபவப் பட்டாவில் 40 ஆண்டுகாலமாக வீடு கட்டி, குடியிருந்து வந்தோம். தற்போது நான்கு வழிச்சாலை விரிவாக்கத் திட்டத்துக்காக எங்களது வீடுகள் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 8- ஆம் தேதி அனைத்து வீடுகளும்

இடிக்கப்பட்டன. வீடுகள் கையப்படுத்தப்பட்ட போது, மேற்கூரைகளுக்கு மட்டுமே இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டது.

தற்போது இருக்க இடம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே மாவட்ட நிா்வாகம் எங்களுக்கு மாற்று மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனு அளிக்கும் போது, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலா் மகாராஜன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.