ஆா்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
அரியலூா் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.


அரியலூா் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு, வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் வந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் சந்திரசேகா் மற்றும் ஆய்வாளா் வானதி தலைமையிலான காவல் துறையினா் போக்குவரத்து ஆய்வாளா், கண்காணிப்பாளா் மற்றும் அலுவலக ஊழியா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத ரூ. 65 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...