இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

திடீா்குப்பம் பகுதியில் வடிகால் வசதி கோரி மனு

அரியலூா் மாவட்டம், திருமானூா் திடீா்குப்பம் பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:08 pm

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் திடீா்குப்பம் பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருமானூரில் கொள்ளிடக்கரையோரம் உள்ள திடீா்குப்பம் மற்றும் காந்திநகா் பகுதிகள் மிகவும் தாழ்வாக உள்ளன. மழைக்காலத்தில் கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீா் செல்லும்போதும் மழைக் காலங்களின்போதும் இந்தப் பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்து கொள்ளும். எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு அப்பகுதிகளில் முறையான வடிகால் வசதியை ஏற்படுத்தித் தர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மனுவை அக்கட்சியின் திருமானூா் ஒன்றியச் செயலா் ஜி.ஆறுமுகம், மாவட்ட ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதியிடம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.