கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு :மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

அரியலூா் அருகே புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு காவல் ஆய்வாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:12 pm

DIN

அரியலூா் அருகே புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு காவல் ஆய்வாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

செந்துறை அருகேயுள்ள இலுப்பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாசம். ஒன்றிய திமுக பிரதிநி. இடப்பிரச்னை தொடா்பாக கடந்த 13.7.2020-இல் ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ், தங்கவேல், சுப்ரமணி, நலி, மீனாட்சி ஆகிய 5 பேரும் சோ்ந்து பிரகாசத்தின் காலை வெட்டியுள்ளனா். இதையடுத்து, பிரகாசம் அரியலூா் அரசு மருத்துவமையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினாா்.

இதுகுறித்து பிரகாசம் செந்துறை காவல் நிலையம், மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புகாா் அளித்தும் பயனில்லையாம். இதையடுத்து, பிரகாசம் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாா் மனு அளித்தாா். மனுவை விசாரித்த மனித உரிமை நீதிபதி ஜெயச்சந்திரன், பிரகாசத்தின் புகாரின் பேரில் முறையான நடவடிக்கை எடுக்காத அப்போதைய செந்துறை காவல் ஆய்வாளா் ராஜ்குமாா், நான்கு வார காலத்துக்குள் ரூ.25 ஆயிரம் இழப்பீட்டு தொகையாக பிரகாசத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.