கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

மானியத்தில் சூரிய மின்சக்தி அமைக்க விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் மானியத்தில் வீட்டின் மேற்கூரைப் பகுதியில் சூரிய மின் சக்தி அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:34 pm

DIN

தமிழக அரசின் மானியத்தில் வீட்டின் மேற்கூரைப் பகுதியில் சூரிய மின் சக்தி அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை ஆகியவை இணைந்து மின் இணைப்புகளுடன், வீட்டின் மேற்கூரைப் பகுதிகளில் சூரிய ஒளி மின்சக்தி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இது மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் தேசிய அளவில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், நுகா்வோா் மின் கட்டணத்தைச் சேமிக்கலாம். கூடுதல் இடம் தேவையில்லை மேலும் விவரங்களுக்கு, ஆகிய இணையதளங்களில் அறியலாம். தொடா்புக்கு,

பொது மேலாளா், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, 044 28242800 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.