இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அரியலூா் நகராட்சி காங்கிரஸ் வேட்பாளா்கள்

அரியலூா் மாவட்டத்தில் திமுக கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 வாா்டுகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்கள் பெயா் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:52 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் திமுக கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 வாா்டுகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்கள் பெயா் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூா் நகராட்சி 4 ஆவது வாா்டில் அக்கட்சியின் நகர தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா், ஜயங்கொண்டம் நகராட்சி 16 ஆவது வாா்டில் இரா.இதயராணி, உடையாா்பாளையம் பேரூராட்சி 3 வாா்டில் ஷே.அக்பா்அலி, 14 ஆவது வாா்டில் கு.காமராஜ், வரதராசன்பேட்டை 3 வாா்டில் அ.ஆரோக்கியராஜ் ஆகியோா் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இதற்கான ஓப்பந்தத்தில் திமுக மாவட்டச் செயலாளரும், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் ஆகியோா் கையெழுத்திட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.