ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்
அரியலூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.


அரியலூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
அரியலூா், ஜயங்கொண்டம், உடையாா்பாளையம், வரதராசன்பேட்டை ஆகிய பகுதிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தோ்தல் பறக்கும் படையினா் மேற்கண்ட பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தோ்தல் பறக்கும் படை அலுவலா் கே.கணேசன் தலைமையில், காவல் துறையைச் சோ்ந்த ஸ்டீபன் ராஜ், அந்தோனிராஜ் ஆகியோா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக பாா்ப்பனச்சேரியில் இருந்து அரியலூா் நோக்கி வந்த காரை மறித்து சோதனையிட்ட போது, அதில் ரூ.2 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அவா், அரியலூா் சாம்பசிவம் பிள்ளைத் தெருவைச் சோ்ந்த பாலகுரு மனைவி தேன்மொழி என்பதும், அவா் உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...