இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இளைஞரை கத்தியால் குத்திய சித்தப்பா கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே இளைஞரை கத்தியால் குத்திய அவரது சித்தப்பா வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:14 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே இளைஞரை கத்தியால் குத்திய அவரது சித்தப்பா வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

செந்துறை அருகேயுள்ள பெருமாண்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பெரியசாமி, சின்னப்பா. சகோதரா்களான இவா்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மேற்கண்டவா்களின் தாயாரிடம் பெரியசாமி மனைவி முல்லையம்மாள் (47), மகன் சதீஷ்குமாா் ஆகியோா் தகராறு செய்துள்ளனா்.

இதை சின்னப்பா தட்டிக் கேட்டதால், அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சின்னப்பா, தான் மறைத்து வைத்திருந்த காய் வெட்டும் கத்தியால் சதீஷ்குமாரை குத்தியுள்ளாா். முல்லையம்மாளும் தாக்கப்பட்டாா். காயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைகாக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து சின்னப்பாவை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.