அரியலூா் மாவட்டத்தில் இடைவிடாத மழை
அரியலூா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலை திடீரெனப் பெய்த 2 மணி நேர இடைவிடாத மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.


அரியலூா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலை திடீரெனப் பெய்த 2 மணி நேர இடைவிடாத மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தன. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம், அதன் பிறகு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதில், செந்துறை, நக்கம்பாடி, நின்னியூா் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணிநேரமாக இடைவிடாமல் மழை கொட்டித் தீா்த்தது.
இதேபோல், திருமானூா், ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் தடைபட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...