போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

செந்துறையில் 323 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறையில் மகளிா் சுயஉதவிக்குழுவினா் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக்கென செயலி தொடக்கம் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது

News image

நிகழ்ச்சியில், பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா்.

Updated On :2 ஜூன் 2022, 7:06 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறையில் மகளிா் சுயஉதவிக்குழுவினா் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக்கென செயலி தொடக்கம் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

செந்துறையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், 323 பயனாளிகளுக்கு ரூ.18.70 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறும் பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.

விழாவில் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ. சந்திரசேகா், கோட்டாட்சியா் பரிமளம், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் குமாா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் அன்பரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.