சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

‘22,100 சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு’

அரியலூா் மாவட்டத்தில் 22,100 சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.

News image
Updated On :17 மார்ச் 2022, 8:06 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் 22,100 சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சாா்பில் 12-14 வயது சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை வியாழக்கிழமை அவா் தொடக்கி வைத்து மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் நடத்தப்படும் இந்த சிறப்பு முகாம்கள் மூலம் 12-14 வயதுகுட்பட்ட 22,100 சிறாா்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் த.சித்ராசோனியா, பொது சுகாதாரத் துணை இயக்குநா் கீதாராணி, அரியலூா் நகா் மன்றத் தலைவா் க.சாந்தி மற்றும் மருத்துவா்கள், ஆசிரியா்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.