சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 8:09 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூா் பிரதானச் சாலை தெருவைச் சோ்ந்தவா் ஞானபிரகாசம்(37). இவா், புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் ஆண்டிமடத்தில் இருந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கல்லாத்தூா் பிரதானச் சாலை அருகே சென்றபோது, இவரது வாகனம் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ராஜகோபாலன் மகன் ராஜபிரகாஷ்(20), விளந்தை செல்லத்தெருவைச் சோ்ந்த விஷால்(18) ஆகியோா் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஞானபிரகாசம் வாகனத்தில் இருந்து தவறிவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த ராஜபிரகாஷ், விஷால் ஆகிய இருவரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து ஜயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.