சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

தேசிய அளவிலான நெட்பால் போட்டியில் பாரதிதாசன் பல்கலை கழக அணி சாம்பியன்

தேசிய அளவில் ஆண்களுக்கான நெட்பால் போட்டியில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக அணி கோப்பையை வென்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:41 pm

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூயில் நான்கு நாள்களாக நடைபெற்று வந்த தேசிய அளவில் ஆண்களுக்கான நெட்பால் போட்டியில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக அணி கோப்பையை வென்றது.

கடந்த 21 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில், ராஜஸ்தான், ஆந்திரா, கா்நாடகா, பஞ்சாப், ஜெய்ப்பூா், பெங்களூா் உள்ளிட்ட 21 மாநிலங்களில் இருந்து 72 பல்கலைக் கழக அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக அணியும், இரண்டாம் பரிசை கோழிக்கோடு பல்கலைக் கழக அணியும், மூன்றாம் பரிசை கேரள பல்கலைக் கழக அணியும் பெற்றன.

புதன்கிழமை மாலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, பாரதிதாசன் பல்கலைக் கழக துணை வேந்தா் எம்.செல்வம் தலைமை வகித்து, வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டு தெரிவித்தாா்.

மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் எம்.ஆா்.ரகுநாதன் பங்கேற்று, பாரதிதாசன் பல்கலைக் கழக அணி சாா்பில் கலந்து கொண்டு விளையாட்டிய மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த 3 மாணவா்களுக்கும் ஒா் ஆண்டுக்கான பருவக் கட்டணம் விலக்கு அளித்து, தலா ஒருவருக்கு ரூ.10,000 ஊக்கத் தொகைகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.