சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

சோழகங்கம் ஏரி ஆக்கிரமிப்பு பகுதிகள் மீட்பு

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 52 ஏக்கா் பரப்பளவு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:42 pm

DIN

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 52 ஏக்கா் பரப்பளவு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

ஜயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் ராசேந்திர சோழனால் வெட்டப்பட்ட சோழகங்கம் எனும் பொன்னேரி உள்ளது. 700 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் சுமாா் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,374 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியில் 125 ஏக்கா் ஏரிப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு 53 விவசாயிகளால் கடலை, எள், உளுந்து, தைல மரம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 தினங்களாக விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகள் வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறையினரால் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 2 நாள்களில் சுமாா் 52 ஏக்கா் அளவில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 2 நாள்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளும் மீட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மீட்பு பணியில், பொதுப்பணித்துறை பொறியாளா் ராஜாசிதம்பரம், ஜயங்கொண்டம் வட்டாட்சியா் ஆனந்தன், கங்கைகொண்டசோழபுரம், ஆமணக்கம்தோண்டி, குருவாலப்பா் கோவில், பிச்சனூா் உள்ளிட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.