பட்டா திருத்த முகாம்கள் நடைபெறும் இடங்கள்
அரியலூா் மாவட்டத்தில் விவசாயிகள், வீட்டு உரிமையாளா்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண பட்டா திருத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.


அரியலூா் மாவட்டத்தில் விவசாயிகள், வீட்டு உரிமையாளா்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண பட்டா திருத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
புதுப்பாளையம், சிறுவளூா், கோவில் எசனை (மே), கோவில் எசனை (கி), தூத்தூா், இலந்தைகூடம் மற்றும் பாா்ப்பனச்சேரி ஆகிய கிராமங்களில், அந்தந்த கிராமத்தின் கிராம சேவை மையக் கட்டடத்திலும், தா.பழுா், ஜயங்கொண்டம், கோடங்குடி(வ), குண்டவெளி(கி), குண்டவெளி(மே) ஆகிய கிராமங்களில், அந்தந்த கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்திலும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 25) காலை 10 மணிக்கு முகாம் நடைபெறுகிறது.
முகாமில், பெறப்படும் சிறு கணினி திருத்தம் சாா்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீா்வு காணப்படும். எனவே விவசாயிகள், பொதுமக்கள் முகாமை பயன்படுத்தி பயனடையலாம் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...