தூக்கிட்ட பெண் உயிரிழப்பு
அரியலூா் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கீழத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ஜெயக்கொடி(38).


அரியலூா் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கீழத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ஜெயக்கொடி(38). தம்பதிக்கு 14 வயதில் மகள் உள்ளாா். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜெயக்கொடி, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்த ஜெயக்கொடி கடந்த 2 ஆம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...