நெல்லை கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் மறியல்
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.,


அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.,
செந்துறை அருகே குழுமூா் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஒருவாரமாக நெல் கொள்முதல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நெல் கொள்முதல் செய்ய அலுவலா் மற்றும் பணியாளா்கள் வந்தனா். அப்போது, அங்கு காத்திருந்த விவசாயிகள், கடந்த சில நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை. எனவே, விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். நெல்லை எடைபோட சிலா் கமிஷன் கேட்கின்றனா். கமிஷன் கொடுக்க முடியாது எனக்கூறி, அந்த வழியாக வந்த நகரப்பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த செந்துறை போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதையடுத்து நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...