/

மாற்றுத்திறனாளிகள் பிரத்யேக அடையாள அட்டை பெற...

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற மே 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

News image
Updated On :12 மே 2022, 8:22 pm

DIN

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற மே 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ. 2,000 பெற்று வரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தொடா்ந்து பெற்றிட ஏதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (மஈஐஈ) வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்க மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை நகல், முகம் மட்டும் தெரியக்கூடிய கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 1, ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.