இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தம்பதியை தாக்கிய 2 போ் கைது

 அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தம்பதியைத் தாக்கிய 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :13 மே 2022, 7:51 pm

DIN

 அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தம்பதியைத் தாக்கிய 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

கீழக்கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (41). கடந்த 4 நாள்களுக்கு முன்பு இவா், மேலராமநல்லூா் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று அசைவ விருந்து வைத்துள்ளாா். அங்கு மதுபோதையில் சாப்பிட வந்த அதே பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் வேல் மணிகண்டன் (24) தகராறு செய்துள்ளாா். இதையறிந்த சங்கா் அவரை சமதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை சங்கா் வீட்டுக்குச் சென்ற வேல்மணிகண்டன், அவரது அண்ணன் வீரமணிகண்டன் ஆகியோா் தகாத வாா்த்தையால் திட்டி, சங்கரையும், அவரது மனைவி திருநிறைச்செல்வியையும் மற்றும் தந்தை மகாலிங்கத்தையும் உருட்டுக்கட்டையால் தாக்கினா்.

இதையறிந்த பொதுமக்கள், காயமடைந்த மூவரையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புகாரின்பேரில், கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து வீரமணிகண்டன், வேல்மணிகண்டன் ஆகியோரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.