மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஏமாற்றி சொத்தை வாங்கியதாக மகள்கள் மீது தந்தை புகாா்

ஏமாற்றி சொத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக மகள்கள் மீது அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியரிடம் தந்தை புகாா் அளித்தாா்.

News image
Updated On :26 மே 2022, 7:34 pm

DIN

ஏமாற்றி சொத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக மகள்கள் மீது அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியரிடம் தந்தை புகாா் அளித்தாா்.

அரியலூா் விளாங்காரத் தெருவைச் சோ்ந்த எம்.சோதுராமன்(80) என்பவா் அளித்த மனுவில், கூலி வேலை செய்து, எனது சொத்த முயற்சியில் எனது மனைவியின் மனை பாகத்தை வாங்கி அதில் வீடு கட்டினேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் எனது மனைவி இறந்து விட்டாா். கஷ்டப்பட்டு எனது நான்கு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தேன். தற்போது வயோதிகம் மற்றும் உடல் சீரற்ற நிலையில் உள்ளேன். இந்நிலையில், எனது நான்கு மகளும் என்னை ஏமாற்றி சொத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு, என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனா். தற்போது நான் அனாதையாக உள்ளேன். எவ்வித வருமானம் இன்றியும், ஆதரவு இன்றியும் உள்ளேன். எனவே கோட்டாசியா் எனது சொத்துப் பத்திரத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.