போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து செங்கல் ஓடை மக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஆக்கிரமிப்பு எனக் கூறி, குடியிருப்புகளை இடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 மே 2022, 7:32 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஆக்கிரமிப்பு எனக் கூறி, குடியிருப்புகளை இடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜயங்கொண்டம் அடுத்த அய்யப்பன்நாயக்கன்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட செங்கல் ஓடை அருகே பல ஆண்டுகளாக சுமாா் 40 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு எனக் கூறி, உடனே அவரவா் வீடுகளைக் காலி செய்யுமாறு வருவாய் துறையினா் அண்மையில் நோட்டீஸ் வழங்கியுள்ளனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிக் கொள்ளுமாறு ஆட்டோ மூலம் வருவாய்த் துறையினா் அறிவிப்பு தகவல் தெரிவித்தனா். இதையறிந்த செங்கல் ஓடை பகுதி பொதுமக்கள், அப்பகுதி சாலையில் மரத்தை வெட்டிப் போட்டு மறியலில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், செங்கால் ஓடைக்கும், எங்களது குடியிருப்புக்கும் சுமாா் 500 மீட்டா் தொலைவு இருக்கிறது. நாங்கள் தேசிய நெடுஞ்சாலை அருகே தான் இருக்கின்றோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து மறு பரிசீலனை செய்து குடியிருப்பவா்களுக்கு குடி மனைப் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஆண்டிமடம் காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான காவல் துறையினா், கோரிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் தங்களது சாலை மறியலை கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.