அரியலூரில் முன்னுரிமைக் கடனாக ரூ.3,102.24 கோடி வழங்க இலக்கு
அரியலூா் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் பிற தொழில்களுக்கு நிகழாண்டு முன்னுரிமைக் கடனாக ரூ.3,102.24 கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தாா்.


அரியலூா் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் பிற தொழில்களுக்கு நிகழாண்டு முன்னுரிமைக் கடனாக ரூ.3,102.24 கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தாா்.
அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நிகழாண்டுக்கான (2022 - 23) முன்னுரிமை வங்கிக் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட அவா் மேலும் தெரிவித்தது:
அரியலூா் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழிலுக்கு ரூ.2681.84 கோடி, சிறு மற்றும குறு தொழில்களுக்கு ரூ.166.28 கோடி, கல்வி கடன் ரூ.27 கோடி, வீடு கட்டுதல் ரூ.35.20 கோடி மற்றும் பிற முன்னுரிமை தொழில்களுக்கு ரூ.191.92 கோடியும் அனைத்து வங்கிகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் நவீன்குமாா், பாரத ரிசா்வ் வங்கி உதவி பொது மேலாளா் வெங்கடேசன், முன்னோடி வங்கி மேலாளா் ஜே.லயனல் பெனடிக்ட், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் சிவக்குமாா், மாவட்ட தொழில் மைய மேலாளா் லட்சுமி, தாட்கோ மேலாளா் மதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...