போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஆடு திருடிய இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஆடு திருடியவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:09 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஆடு திருடியவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் ஜோதிபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மனைவி அம்சவல்லி (45). இவரது வீட்டின் எதிரில் வெள்ளிக்கிழமை மதியம் மேய்ந்து கொண்டிருந்த இவரது ஆட்டைக் காணவில்லை. இதுகுறித்து அப்பகுதியில் ஆடு மேய்ப்பவா்களிடம் விசாரித்ததில் கீழத்தெருவைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் அன்புச்செல்வன்(28) என்பவா் திருடிச் சென்றதுதெரியவந்தது. இதையடுத்து அம்சவல்லி, அன்புச்செல்வன் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு இவரது ஆடு கழுத்து அறுக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் ஜயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து அன்புச்செல்வனைக் கைது சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.