அரியலூா் அருகே பைக்கில் சென்ற விவசாயி காா்கள் மோதி உயிரிழப்பு

அரியலூா்: அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து இரு காா்கள் மோதி உயிரிழந்தாா்.

வி.கைகாட்டியை அடுத்த செட்டித்திருக்கோணம் கிராமத்தைச் சோ்ந்தவா் உப்பிலாமணி மகன் ராமசாமி (57). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி செல்வம்பாளை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு காட்டுப்பிரியங்கியம் கிராமத்தில் நடந்த உறவினரின் சுப நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தாா்.

அவா்கள் திருச்சி-சிதம்பரம் சாலையைக் கடந்தபோது ஜெயங்கொண்டத்திலிருந்து நெய்வேலி, ஹாஸ்டல் டைப் பிளாக் பகுதியைச் சோ்ந்த சு. இசக்கிமுத்து (55) என்பவா் ஓட்டி வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்து சாலையோரம் கிடந்த ராமசாமி, பின்னால் வந்த மற்றொரு காா் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அதேநேரம் திருச்சியிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கிச் சென்ற செந்துறையை சோ்ந்த அறிவொளி ஓட்டிவந்த காா், சாலையில் கிடந்த இருசக்கர வாகனத்தில் மோதி தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து காரினுள் இருந்தவா்கள் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து வெளியேறினா்.

தகவலறிந்து சென்ற அரியலூா் தீயணைப்புத் துறையினா் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். விபத்து குறித்து அரியலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com