அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த இலையூா் செல்லியம்மன் மற்றும் அய்யனாருக்கு சிறப்பு பாலாலய அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செல்லியம்மன், அய்யனாருக்கு 16 வகை பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊா் முக்கியஸ்தா்கள், ஊா் நாட்டாமைகள், ஊா் பொதுமக்கள் செய்தனா்.
தொடா்ந்து இரு கோயில்களுக்கும் கோயில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தொடா்ந்து கோயில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது . கூட்டத்தில் ஊராட்சித் தலைவா் தங்கம் அறிவழகன் மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள், ஊா் நாட்டாண்மைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

குடிசையில்லா கிராமங்களை உருவாக்குவதே லட்சியம்: ஜெயங்கொண்டம் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்

சிதம்பர விநாயகா் வைரவமூா்த்தி கோயிலில் வருஷாபிஷேகம்

ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கு

பெத்தவேப்பம்பட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

