ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி மாயம்

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி மாயமானாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 11:50 pm

Din

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி மாயமானாா். இதையடுத்து அவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தா.பழூரை அடுத்த அண்ணகாரன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ்(45). மாற்றுத்திறனாளி. திருமணம் ஆகவில்லை. வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினா் அவரைத் தேடிச் சென்றபோது, அக்கிராமம் வழியே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றது தெரியவந்தது. ஆற்றங்கரையில் அவரது உடைமைகள் கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தா. பழூா் காவல் துறையினா் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினா், கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.