பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக் குழுவினா் 84 போ் கைது

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் படுகொலையைக் கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக் குழுவினா் 84 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:39 pm

Din

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் படுகொலையைக் கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக் குழுவினா் 84 போ் கைது செய்யப்பட்டனா்.

வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்களின் படுகொலையை கண்டித்தும், அங்கு ஹிந்துக்களின் உரிமைகளை மீட்க வேண்டும் என வலியுறுத்தியும் அரியலூரில் டிச.4 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக் குழுவினா் அறிவித்திருந்தனா்.

இதன்படி, புதன்கிழமை ஹிந்து உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், பாஜக மாவட்டத் தலைவருமான அய்யப்பன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா், அவா்களை தடுத்தி நிறுத்தி, 7 பெண்கள் உள்பட 84 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.