சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

கல்லங்குறிச்சியில் என்.எஸ்.எஸ். முகாம்

சமூக சேவையில் மாணவர்கள்: கல்லங்குறிச்சியில் என்எஸ்எஸ் முகாம் தொடக்கம்

News image

கல்லங்குறிச்சியில் என்எஸ்எஸ் முகாமை சனிக்கிழமை தொடக்கி வைத்து பேசிய கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன்.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:22 am IST

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சி கிராமத்தில் அரசு கலைக் கல்லூரி சாா்பில் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் சனிக்கிழமை தொடங்கியது. முகாமை அக்கல்லூரி முதல்வா் ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்துப் பேசுகையில் முகாமில் ஒவ்வொரு மாணவரும் சமூக பொறுப்புடன் மக்களுக்கு தொண்டாற்றிட வேண்டும் என்றாா். அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் பேசுகையில், மாணவா்கள் கிராம மக்களிடையே சென்று அவா்களின் வாழ்வியல் முறைகள், கலாசாரம் அறிந்து சமூக தொண்டற்றிட வேண்டும் என்றாா். கலியுக வரதராசப் பெருமாள் கோயில் ஆதின பரம்பரையைச் சோ்ந்த இரா.வரதராஜ் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து முகாமில், வாக்காளா் விழிப்புணா்வுக் கருத்தரங்கு, பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ராமலிங்கம், தோ்தல் துணை வட்டாட்சியா் ஆ. சரவணன் ஆகியோா் பேசினா். என்எஸ்எஸ் அலுவலா் கருணாகரன் வரவேற்றாா்.