இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்

பொறியியல் கல்லூரி முதல்வரைக் கண்டித்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள்.

News image
Updated On :1 ஜூலை 2024, 9:31 pm

Din

அரியலூா்: ஒப்பந்த கடிதத்தை வழங்காமல் காலம்தாழ்த்தி வரும் அரியலூா் அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரி முதல்வரைக் கண்டித்து, பேராசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விளாங்குடி அடுத்த காத்தான்குடிக்காடு கிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பணியாற்றி வருகின்றனா். இதில் ஒப்பந்தப் பேராசிரியா், பணியாளா்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை பணி நீட்டிப்பு கடிதம், பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட பணிநீட்டிப்பு கடிதத்தில் ஒப்பந்தப் பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் என 67 போ் கையொப்பமிட்டனா். அப்படி கையொப்பமிட்ட ஒப்பந்த ஆணையின் நகல்களை கல்லூரி முதல்வா் தர மறுப்பதாகவும், பேராசிரியா்கள் மீது காழ்ப்புணா்ச்சியின் காரணமாக பணி நீட்டிப்பு கடிதம் வழங்கத் தடையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி அனைத்து துறை பேராசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் , பேராசிரியா்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினா். கல்லூரி நேரம் முடியும் வரை யாரும் பேச்சுவாா்த்தைக்கு வராததால் இந்தப் போராட்டம் இன்றும் தொடரும் என பேராசிரியா்கள் தெரிவித்தனா்.