அரியலூா் நகராட்சி, 15-ஆவது வாா்டில் புதிய நியாய விலைக் கடை கட்டடத்தை திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா்  ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.

அரியலூரில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு

சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை திறப்பு

அரியலூா்: அரியலூா் நகராட்சிக்குள்பட்ட 15-ஆவது வாா்டில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்து, கடையை திறந்து வைத்தாா்.

சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, குடும்ப அட்டைதாரருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கி தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், துணைத் தலைவா் கலியமூா்த்தி, வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் மகேஸ்வரி மற்றும் நகா் மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com