பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

இந்திய விமானப் படையில் சேர வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் இந்திய விமானப் படை பணிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

News image

தத்தனூா் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய விமானப் படை பணி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மூ.வினோத்குமாரிடம் கையேடு வழங்கிய இந்திய விமானப் படை கமாண்டிங் அலுவலா் கே.மூா்த்தி.

Updated On :5 மார்ச் 2024, 6:59 pm

அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் இந்திய விமானப் படை பணிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் தாளாளா் எம்.ஆா்.ரகுநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா்கள் ஆா்.ராஜமாணிக்கம், வை.தியாகராஜன், என்.ஆா்.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மூ.வினோத்குமாா், இளம் தொழில் வல்லுநா் அ.எபினேஸா் ராஜா ஆகியோா் சிறப்புரையாற்றினா். இந்நிகழ்ச்சியில், இந்திய விமானப் படை கமாண்டிங் அலுவலா் கே. மூா்த்தி கலந்து கொண்டு, இந்திய விமானப் படை அதன் தோ்வு நடைமுறை, பணி வாய்ப்புகள் அதற்கான தகுதிகள் குறித்துப் பேசினாா். தொடா்ந்து நடைபெற்ற விநாடி - வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினா். முன்னதாக கல்லூரி முதல்வா் ச.சிவசங்கா் வரவேற்றாா். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு இளநிலை உதவியாளா் அ.அருணா நன்றி தெரிவித்தாா்.