பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நவ.15-இல் அரியலூா் வருகை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தகவல்

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடக்கி வைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் நவ. 15-ஆம் தேதி வரவிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:37 pm

Din

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடக்கி வைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் நவ. 15-ஆம் தேதி வரவிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அரியலூா் மாவட்டத்துக்கு நவம்பா் 15-ஆம் தேதி வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவையில் அறிவித்தப்படி ஜெயங்கொண்டத்தை அடுத்த மகிமைப்புரத்தில் சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பின்னா், அரியலூரில் நடைபெறும் அரசு விழாவில், அரியலூா்-பெரம்பலூா் மாவட்டங்களைச் சோ்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தும் உரையாற்றுகிறாா். தொடா்ந்து, பெரம்பலூரில் நடைபெறும் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறாா்.

நிகழாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் மட்டும் ஐந்தே முக்கால் லட்சம் போ் பயணித்துள்ளனா். இது கடந்த ஆண்டைவிட கூடுதலாகும்.

போக்குவரத்துத் துறையின் நிதிநிலைமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு என்பது கிடையாது. அது மக்களுக்கான சேவை துறையாகும். லாபத்தில் இயங்கக் கூடிய சேவை இல்லை. தமிழ்நாட்டைவிட மற்ற மாநிலங்களில் இரண்டு மடங்கு பேருந்து கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இங்கே குறைவான கட்டணம்; மக்களுக்கு நிறைவான பயணம் என்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது என்றாா் அவா்.