பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

News image

செந்துறையில் புதன்கிழமை பெய்த மழையின்போது ஊா்ந்து சென்ற வாகனங்கள்.

Updated On :13 நவம்பர் 2024, 9:06 pm

Din

அரியலூா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது பெய்து வந்த மழையானது புதன்கிழமை காலையிலே வெளுத்து வாங்கியது. இதில் ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறையில் மட்டும் மழை கொட்டி தீா்த்தது. இதனால் பள்ளிகளுக்கு மாவட்ட நிா்வாகம் விடுமுறை அறிவித்தது.

ஆனால் மதியத்துக்கு மேல் ஒரு சில இடங்களில் லேசாகவும், மேகமூட்டத்துடனும் காணப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷண நிலை காணப்பட்டது.

புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி மழையளவு (மில்லிமீட்டரில்): அரியலூரில்-9, திருமானூா்-2.6, ஜெயங்கொண்டம் -81, செந்துறை -66, குருவாடி-10, சித்தமல்லி நீா்தேக்கம்-9, தா.பழூா்-8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.