வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்...

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:51 pm

Din

அரியலூா் மாவட்டம், புதுப்பாளையம் நெல்லியாண்டவா் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் சிறிய அளவிலான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை(நவ.29) நடைபெறவுள்ளதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இம்முகாமில் முன்னனி தனியாா்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான நபா்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளனா். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநா்களும் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.

எனவே, இம்முகாமில் கலந்துகொள்வதற்கு 18 - 35 வயது வரையுள்ள, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 94990 55914 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.