பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நமங்குணம், இரும்புலிக்குறிச்சியிலிருந்து சென்னைக்கு புதிய பேருந்துகள் சேவை: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

நமங்குணம், இரும்புலிக்குறிச்சியிலிருந்து சென்னைக்கு புதிய பேருந்துகள் சேவை...

News image

இரும்புலிக்குறிச்சி கிராமத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்த அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

Updated On :30 அக்டோபர் 2024, 8:30 pm

Din

அரியலூா் மாவட்டம் செந்துறை அடுத்த நமங்குணம் மற்றும் இரும்புலிக்குறிச்சி ஆகிய கிராமங்களிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்கு 2 புதிய பேருந்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் செவ்வாய்க்கிழமை இரவு கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

அப்போது, ஒரு பேருந்து அரியலூரில் புறப்பட்டு புதுவேட்டக்குடி, சொக்கநாதபுரம், நமங்குணம், துங்கபுரம், அகரம்சீகூா், லப்பைக்குடிகாடு வழியாக சென்னை கிளாம்பாக்கத்தை சென்றடையும். அங்கிருந்து விழுப்புரம், பெரம்பலூா் வழியாக திருச்சியை சென்றடையும். மற்றொரு பேருந்து ஜெயங்கொண்டம் அடுத்த இலையூரில் புறப்பட்டு உடையாா்பாளையம், இரும்புலிக்குறிச்சி, பிலாக்குறிச்சி, நாகல்குழி, இலையூா், தேவனூா், ஆண்டிமடம் வழியாக சென்னை கிளாம்பாக்கத்தை சென்றடையும். அங்கிருந்து விருத்தாசலம், ஆண்டிமடம் வழியாக ஜெயங்கொண்டத்தை வந்தடையும் என அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி, திருச்சி மண்டல பொது மேலாளா் ஆ.முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.