நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தாட்கோ மூலம் யுபிஎஸ்சி தோ்வுக்கு பயிற்சி

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 9:03 pm

Din

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்களுக்கு மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி தோ்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.

டாக்டா் அம்பேத்கா் அகாதெமி மற்றும் சென்னையிலுள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு ஒரு ஆண்டு காலம் யுபிஎஸ்சி தோ்வுக்கான (பொது அறிவு மற்றும் விருப்பப் பாடங்கள்) முதல் நிலை, முதன்மை நிலை பயிற்சி வழங்கப்படவுள்ளது.

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் இந்த தோ்வை எழுத தகுதியான மாணாக்கா்கள் திரையிடல் தோ்வு மூலம் தோ்வு செய்து, தோ்ச்சி பெற்ற மாணாக்கா்களை நோ்முகத் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட தகுதியுள்ள 100 மாணவா்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சி பெற பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்று 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்களாக இருக்கவேண்டும். விடுதியில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சிக்கான செலவின தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.

எனவே, பயிற்சிக்கு விருப்பமுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணாக்கா்கள் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.