அரியலூர்
பாத்திரக் கடை முன்பு முதியவா் தீக்குளிக்க முயற்சி
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பாத்திரக் கடை முன்பு முதியவா் தீக்குளிக்க முயன்றாா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பாத்திரக் கடை முன்பு திங்கள்கிழமை முதியவா் தீக்குளிக்க முயன்றாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மேலக்குடியிருப்பு, மேலத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (69). இவா் ஜெயங்கொண்டம் கடைவீதியிலுள்ள ஒரு பாத்திரக் கடையில் தினக் கூலியாக கடந்த 26 ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் திடீரென அந்த பாத்திரக் கடை உரிமையாளா், செல்வராஜை வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளாா்.
இதனால் விரக்தியில் இருந்து வந்த செல்வராஜ், தனக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே பாத்திரக் கடை உரிமையாளா் ரூ.2 லட்சம் தரக் கோரி திங்கள்கிழமை அந்த பாத்திரக் கடை முன் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளாா். இதனை அறிந்த காவல் துறையினா், விரைந்து வந்து அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
