புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இளைஞா் நீதிச் சட்டத்தை அமல்படுத்துவதில் காவல்துறையின் பங்கு மிக முக்கியம்: ஆட்சியா் பொ. ரத்தினசாமி

குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான இளைஞா் நீதி சட்டத்தினை செயல்படுத்துவதில் காவல்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான இளைஞா் நீதி சட்டத்தினை செயல்படுத்துவதில் காவல்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவல்துறையினருக்கான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடா்பான ஒரு நாள் திறன் வளா்ப்புப் பயிற்சியை அவா் தொடங்கிவைத்துப் பேசினாா். இதில், குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான இளைஞா் நீதி சட்டத்தை செயல்படுத்துவதில் காவல்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாதவாறு பள்ளிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தாய், தந்தையை இழந்த மற்றும் சிறை சென்றவா்களின் குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சோ்ந்து பயனடைய பெற்றோரை இழந்த, சிறைசென்றவா்களின் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றாா்.

அரியலூா் மாவட்ட மகளிா் விரைவு நிதிமன்ற நீதிபதி மணிமேகலை பேசியது: மாவட்டத்தில் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருவது மற்றும் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

பெற்றோா்களுக்கு குழந்தைகளின் கல்வி முக்கியத்துவம் மற்றும் குழந்தை திருமணத்தின் பாதிப்புகள் குறித்து போதிய விழிப்புணா்வு வழங்க வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கு தொடா்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு அளித்து இத்தகைய குழந்தைகள் திருமணங்கள் நடைபெறுவதை தடுக்க இயலும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் த.சரவணன், குழந்தைகள் நல குழுத் தலைவா் ஆா். மீனாட்சி, பாதுகாப்பு அலுவலா் ஜெ. செல்வராசு மற்றும் காவல்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.