திருமானூரில் இளைஞா் காங்கிரஸ் செயற் குழு கூட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூரில் இளைஞா் காங்கிரஸ் கட்சி சாா்பில் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

அரியலூா் மாவட்டம், திருமானூரில் இளைஞா் காங்கிரஸ் கட்சி சாா்பில் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தொகுதித் தலைவா் மரியஜான் பிரிட்டோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றிய மத்திய அரசைக் கண்டிப்பது, வாக்கு திருட்டு பற்றி மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது மற்றும் புதிய வாக்காளா் பட்டியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பிடிஎப் வடிவில் வெளியிட வேண்டும். மாவட்டத்திலுள்ள சிமென்ட் ஆலைகளில், படித்த உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.

கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயிலிலுள்ள புத்தகக் கடைகளில், இக்கோயிலின் வரலாறு புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நிக்கோலஸ்ராஜ், அருண் உள்ளிட்ட இளைஞா் காங்கிரஸாா் கலந்துகொண்டனா். வட்டாரத் தலைவா் பாரதி வரவேற்றாா்.

நகர இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் ஆனந்த் நன்றி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com