அரியலூரில் பனை விதைகள் நடும் இயக்கம் தொடக்கம்
அரியலூா் மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பெருந்திரள் பனை விதைகள் நடுதல் இயக்கம் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
இதற்காக அரியலூா் அடுத்த வாலாஜா நகரம் கிராம ஊராட்சி ஏரிக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, 2,000 எண்ணிக்கையில் பெருந்திரள் பனை விதைகள் நடும் இயக்கத்தைத் தொடக்கி வைத்து, இயற்கையைப் பாதுகாப்பது, நிலத்தடி நீரை மேம்படுத்துவது, நீா்நிலைகளைப் பாதுகாப்பது, பல்லுயிா்ப் பெருக்கத்தை உருவாக்குவது போன்ற பசுமையை நோக்கிய நெடும் பயணமாக அரியலூா் மாவட்டத்தில் பனை விதைகள் நடும் பணியானது தொடரும் எனத் தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சிவராமன், உதவித் திட்ட அலுவலா் நந்தகோபாலகிருட்டிணன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துக்குமரன், மலா்க்கண்ணன், வனச்சரகா் பழனிசாமி மற்றும் ஊராட்சி செயலா்கள், தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

